பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது!

கடந்த இரு மாதங்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின் இன்று பாராளுமன்றம் கூடுகின்றது.

இதேவேளை, கடந்த சில பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய அமர்வில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி சம்பந்தமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாராளுமன்றின் பார்வையாளர் கலரி இன்றையதினம் திறக்கப்படுமென படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது! பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது! Reviewed by NEWS on December 18, 2018 Rating: 5