மைத்திரியை “மனநல” பரிசோதனை செய்ய வேண்டும் - சரத் பொன்சேகா

இலங்கையின் ஜனாதிபதியை அமெரிக்காவில் போன்று வருடாந்தம் மனநல பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இது போன்ற நடைமுறை இருப்பதாகவும் ஜனாதிபதி மற்றும் இராணுவ முக்கியஸ்தர்கள் இவ்வாறு பரிசோதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், அதே போன்று இலங்கையிலும் பின்பற்றுதல் நலம் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது தற்போதைய சிக்கலைத் தீர்த்து வைக்கப் போவதாக தெரிவித்து வரும் ஜனாதிபதி நேற்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் தீர்வு வரும் என 'நேற்று' தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...