நாளை ரணில் பிரதமராக பதவியேற்கிறார் !

Ceylon Muslim
0 minute read
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க கூறினார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக அவர் கூறினார்.

அத தெரணவிடம் கருத்து வௌியிட்ட அசோக அபேசிங்க இதனைக் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக பாராளுமன்ற ஹரின் பெர்ணான்டோவிடம் அத தெரண வினவிய போது, நாளைய தினம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்று கூறினார்.
To Top