பொன்சேகாவுக்கு அமைச்சு இல்லை - உறுதியாக ஜனாதிபதி

முன்னாள் இராணுவதளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கு அமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்பதை காரணம் காட்டி சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் சரத்பொன்சேகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்நிலையிலேயே சிறிசேன அதனை நிராகரித்துள்ளார்.எனினும் ஐக்கியதேசிய கட்சி சிறிசேனவின் நிராகரிப்பை ஏற்க மறுத்துள்ளது.பொன்சேகாவுக்கு அமைச்சு இல்லை - உறுதியாக ஜனாதிபதி பொன்சேகாவுக்கு அமைச்சு இல்லை - உறுதியாக ஜனாதிபதி Reviewed by NEWS on December 19, 2018 Rating: 5