தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Dec 22, 2018

முஸ்லிம்களுக்கு, UNF அரசில் நான்கு கேபினட், நான்கு இராஜாங்க அமைச்சுஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன், கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

நேற்றிரவு ஜனாதிபதி வழங்கிய பிரதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற, இராஜாங்க அமைச்சர்களில் நான்கு பேர் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த வகையில், பைசல் காசிம் சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சராகவும், எச்.எம்.எம். ஹரீஸ் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும், அமீர் அலி விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், அலி சாஹிர் மௌலானா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

குறைந்த அமைச்சுக்களுக்கு மத்தியில் பெற்றுள்ள இந்தப் பதவிகள் ஓர் அமானிதம் என்ற உணர்வுடனும், உஸ்வா ஹஸனாவை வெளிக்காட்டும் வகையிலும் நாட்டில் இவர்கள் செயற்படுவார்களாக இருந்தால், ஏனைய அமைச்சர்கள் நிச்சயம் முன்மாதிரியை வேறு எங்கும் தேட மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். 

dailyceylont

Post Top Ad

Your Ad Spot

Pages