தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

“வன்முறையின்மை மற்றும் சமாதானத்துக்கான சர்வதேசப் பாடசாலை தினம்!


 
பாடசாலைச் சிறார்களுக்கு, சமாதானம், அஹிம்சை, வன்முறையின்மை ஆகியவற்றின் பெறுமதி தொடர்பாகத் தெளிவூட்டுவதற்காக, “வன்முறையின்மை மற்றும் சமாதானத்துக்கான சர்வதேசப் பாடசாலை தினம் நாளை (30), பாடசாலைகளில் அனுஷ்டிக்கபடப் உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போ​தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “எமது தேர்தல்கள் ஆணைக்குழு, கடந்த 5 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டதைப் போன்று, இவ்வாண்டும் “சர்வஜன வாக்கெடுப்பைப் பாதுகாப்போம்” என்ற எமது எண்ணத்தின் கீழ், “வன்முறையற்ற சமாதானத்துக்கான சர்வதேச பாடசாலைத் தினம்” அனுஸ்டிக்கப்படவுள்ளது” என்றார்.

தேர்தலில், வாக்குரிமை தொடர்பில் பிரஜைகளைத் தெளிவுப்படுத்துவதற்காக, தற்போதைய வாக்காளர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களையும் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகக் கூறிய அவர், கல்வியமைச்சுடன் இணைந்தே இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் சகல பாடசாலைகளிலும், வன்முறையற்ற சமாதானம் தொடர்பில், அதிபர்கள், சுமார் 15 நிமிட உரையை நிகழ்த்துவார்கள் என்றார்.

இதற்கு, தேர்தலோடு என்ன தொடர்பு உள்ளதெனக் கேட்பதாகவும் சிறுவர்கள், சிறு வயதிலேயே இது தொடர்பில் அறிந்து கொள்வார்களேயானால், பிரச்சினையின்றி கலந்துரையாடல் மூலம் அனைத்தையும் தீர்த்துகொள்ளப் பழகுவார்கள் என்றும் பகடிவதையையும் இதன்மூலம் இல்லாமல் செய்யமுடியுமென்றும் கூறிய தவிசாளர், சர்வஜன வாக்குரிமையின் முக்கியதுவத்தை வலியுறுத்தும் வகையிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

Post Top Ad

Your Ad Spot

Pages