மாகாண சபை தேர்தல் ஜூன் மாதத்திற்கு முன்னர் - அமைச்சரவை அங்கீகாரம்

Ceylon Muslim
0 minute read
மாகாண சபை தேர்தலை ஜூன் மாதத்திற்கு முன்னர் நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்கப்பட்டுள்ள குறித்த யோசனை எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது குறித்த கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றுள்ளது.
To Top