நியாயமானதும் வெளிப்படையானதுமான ஊடகக்கலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது !

ஊடக சுதந்திரத்துக்கு வழியமைத்து நியாயமானதும் வெளிப்படையானதுமான ஊடகக்கலை இன்று உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்கவின் பத்தாவது நினைவு தினம் பொரளை கனத்தையில் நேற்று (08) நடைபெற்றது. இங்கு நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். லசன்த்த விக்ரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராவார். கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளராகவும் சில காலம் பணிபுரிந்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், ஊடகவியலாளர்களை கொல்லாத சமூகமொன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகவியலளர்களுக்கு சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை புரிய கூடியதாகவுள்ளதோடு பேனாவுக்கும் மீண்டும் சரியான இடம் கிடைத்துள்ளது.

மிகவும் நியாயமான, வெளிப்படையான ஊடகக் கலை இன்று நாட்டில் உருவாகியுள்ளது. அது தொடர்பில் லசன்த விக்ரமதுங்க இருக்குமிடத்திலிருந்து மகிழ்ச்சியடைவார்.

லசன்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்களை கொலை செய்யாத சமூகமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே தாமதம் என்னவென்றால் லசன்தவை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதாகும். ஆனால் அது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். வெகுவிரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

கொலை வழக்கு விசாரணைகள் பத்து பதினைந்து வருடங்கள் நடத்தப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸார் எவ்வித தடங்கல் ஏற்பட்டாலும் கொலைக்காரர்களை கண்டுபிடிக்க பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

லசன்த விக்ரமதுங்கவின் குடும்ப அங்கத்தவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்