கல்முனை விகாரைக்கு சென்ற ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்!

கல்முனை விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீ சுபத்திரராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கல்முனை பிரதேசத்திலுள்ள அனைத்து இன மக்களுக்குமேற்ற வகையில் பிரதேசத்தின் அபிவிருத்திகளை மேற்கொள்வது தொடர்பாகவும், கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரை மற்றும் சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றினை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...