முன்னாள் கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­த­னவின் நிலைப்­பாட்டை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது !

உயர் தர பரீட்சை பெறு­பே­று­களின் பிர­காரம் சர்­வ­தேச பாட­சாலை மாணவி ஒருவர் அகில இலங்கை மட்­டத்தில் கலை பிரிவின் முதலாம் இடத்தை பெற்­று­கொண்­டமை தொடர்­பாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­த­னவின் நிலைப்­பாட்டை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்த விடயம் தொடர்­பாக அவர் தெரி­வித்த கருத்­துக்கு நான் மிகவும் வருந்­து­கின்றேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

இசு­று­பா­யவில் அமைந்­துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சர்­வ­தேச பாட­சாலை மாணவி ஒருவர் முத­லா­மி­டத்தை பெற்­றுக்­கொண்­டமை தொடர்­பாக பந்­துல குண­வர்­தன தெரி­வித்த கருத்தில் எந்­த­வொரு நியா­யமும் இல்லை. தற்­போ­தைய கல்வி அமைச்சர் என்ற வகையில் இவ்­வா­றான கருத்தை நான் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன்.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ரமும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பிர­க­ட­னத்தின் பிர­கா­ரமும் கல்வி பயில்­வ­தற்­கான உரி­மையை நாம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். மாண­வர்­க­ளுக்கு கல்வி பயில்­வ­தற்­கான உரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அடிப்­படை தகை­மைகள் இருப்பின் எந்த முறை­யிலும் பரீட்­சைக்குத் தோற்ற எவ­ருக்கும் எந்த தடையும் கிடை­யாது. சர்­வ­தேச பாட­சாலை மாண­வர்கள் தேசிய மட்ட பரீட்­சைக்கு தோற்­று­வதும் பெறு­பே­று­களின் பிர­காரம் முன்­னிலை வகிப்­பதும் இது முதற்­த­ட­வை­யல்ல.

அரச பாட­சா­லை­களில் கல்வி பயிலும் மாண­வர்­களின் கல்வி உரி­மையை பாது­காப்­ப­தற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­துடன் அரச பாட­சா­லை­களின் கல்வி பயி­லா­த­வர்­களின் கல்வி உரி­மை­யையும் பாது­காப்­ப­தற்கு நாம் முன்­னின்று செயற்­ப­டுவோம். இவ்­வா­றான நிலையில் பந்­துல குண­வர்­தன கருத்­தா­னது தற்­போது கல்வி பயிலும் மாண­வர்­க­ளுக்கு மத்­தியில் குழப்­ப­மான நிலை­மையை ஏற்­ப­டுத்தும்.

சர்­வ­தேச பாட­சாலை கல்வி அமைச்சின் கீழ் நிர்­வ­கிக்­க­ப­்படா­வி­டினும் அந்த பாட­சா­லை­களின் தரத்தை கண்­கா­ணிப்­ப­தற்கு சுயா­தீன சபை­யொன்றை நிறு­வி­யுள்ளோம். இந்தக் கண்­கா­ணிப்பின் போது சர்­வ­தேச பாட­சா­லை­களின் கற்றல் – கற்­பித்தல் முறைமை தொடர்­பா­கவும் பாட­சாலை வள மேம்­பா­டுகள் தொடர்­பா­கவும் ஆசி­ரிய வச­திகள் தொடர்­பா­கவும் கண்­கா­ணிப்­பு­களை கல்வி அமைச்சு முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அத்­துடன் சர்­வ­தேச பாட­சாலை நிறுவும் போது கல்வி அமைச்சின் அனு­ம­தியின் கீழ் நிறு­வு­வ­தற்­கான தேவை­யான சட்ட ஏற்­பா­டு­களை தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

இதற்கு அப்பால் மாண­வர்­களின் கல்வி உரி­மையை பாது­காக்கும் நோக்கில் அரு­காமை பாட­சாலை சிறந்த பாட­சாலை வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மேலும் பாட­சாலை சீரு­டைக்­கான வவுச்சர் தொகையிலும் அதிகரிப்பு செய்துள்ளோம். சுரக்சா காப்புறுதி விவகாரத்தில் காணப்பட்ட இழுபறி நிலையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...