பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி ...முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாக பிரதிவாதி சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

அதன்படி வழக்கு எதிர்வரும் ஜூன் 28ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இடர் முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏ.எச்.எம்.பௌசி அமைச்சுக்கு சொந்தமான 19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி ... பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி ... Reviewed by NEWS on March 29, 2019 Rating: 5