ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பு - ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஊடக பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை சந்தித்த போதே, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

இதன்போது பேசிய ஜனாதிபதி; “அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்ரபோல் பொலிசாரிடம் கேட்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமரிடமும் இதுபற்றி பேசினேன்” என்றார்.


மேலும் மரணதண்டனை வழங்கும் திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி கொலைச்சதி விவகார விசாரணை பூர்த்தியடைந்துள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினர் அடுத்த வாரம் இறுதி அறிக்கையை சட்ட மா அதிபரிடம் கையளிப்பார்கள்” எனவும் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...