அர்ஜூனவுக்கு எதிரான துப்பாக்கி சூட்டு வழக்கு : ஒத்திவைப்பு

NEWS
0 minute read



அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏப்ரல் மாதம் 25ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (01) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இன்றைய தினம் விசாரணையின் போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர்க கூறினார். 

அன்றைய தினம் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான சட்டநடவடிக்கை சம்பந்தமான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
To Top