நியூசிலாந்து சம்பவம்: தீவிரவாதி அடையாளம் காணப்பட்டார்

நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அடுத்து 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியோகின.

இந் நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் தொகை 40 ஆக அதிகரித்துள்தாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் எனவும், இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளளனர். அவர்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேதளை கிறிஸ்ட்சர்ச் நகரில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பொலிஸார் தீவிரமாக போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து சம்பவம்: தீவிரவாதி அடையாளம் காணப்பட்டார் நியூசிலாந்து சம்பவம்: தீவிரவாதி அடையாளம் காணப்பட்டார் Reviewed by NEWS on March 15, 2019 Rating: 5