தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 18, 2019

சவூதியின், மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம் இலங்கைக்கு உதவ முன்வருகிறது : ஹிஸ்புல்லாஹ்

சஊதி அரேபிய இளவரசர் "சஊத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத்" அவர்களுக்கு சொந்தமான "Exelentia Arabia" நிறுவனத்தின் பிரதித்தலைவர் "Giovanni Zappia" அவர்களை கிழக்கு ஆளுநரும் முஸ்லீம் வேல்ர்ட் லீக்கின் உயர் சபை உறுப்பினர் "கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்" அவர்களுக்கிடையிலான சந்திப்பு 15.03.2019 அன்று இடம்பெற்றது.

இந் சந்திப்பில் சஊதி அரேபியாவிலும் , அதற்கு வெளியிலும் பல கோடி டொலர்களை முதலீடு செய்கின்ற மிகப் பெரிய நிறுவனமான "Exelentia Arabia" இலங்கையிலும் முதலீடு செய்வது தொடர்பாகவும், இலங்கையில் உள்ள தொழிற்சாலைகளில் முதலீடு செய்து பொருளாதார ரீதியில் இலங்கையை முன்னேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பல பில்லியின் டொலர்கள் முதலீடு செய்து அமைக்கப்டும் புதிய நகரத்திற்கு பொறுப்பான இந் நிறுவனம் இலங்கையிலும் பாரிய முதலீடுகளை விரைவில் மேற்கொள்ள இவ்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. 

இச் சந்திப்பில் முஸ்லீம் வேல்ர்ட் லீக் கிழக்காசிய ஆலோசகர் கலாநிதி அஹமத் ஹமாத் ஜிலான் மற்றும் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மஷூர் மொளலானா அவர்களும் கலந்து கொண்டார்கள்

Post Top Ad

Your Ad Spot

Pages