தற்கொலை தாக்குதலால் பலியானோர் 321 , வைத்தியசாலையில் 375 பேர்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதலால் பலியானோர் 321 , வைத்தியசாலையில் 375 பேர் தற்கொலை தாக்குதலால் பலியானோர் 321 , வைத்தியசாலையில்  375 பேர் Reviewed by Ceylon Muslim on April 23, 2019 Rating: 5