ஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசலில் தீ

ஜெருஸலேம் நகரிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று தீ பரவியது.

இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக அல் அக்ஸா பள்ளிவாசல் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளிவாசலின் தொழுகை அறையொன்றின் கூரையில் இத் தீ பரவ ஆரம்பித்தது. எனினும், ஜெருஸலேம் இஸ்லாமிய வக்ப் தீயணைப்புப் படையினர் இத்தீயை வெற்றிகரமாக அணைத்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...