சிங்களவருக்கு, காடழிப்பது பிரச்சினையில்லை; முஸ்லிம்கள் குடியேறுவதுதான் பிரச்சினை

சிலருக்கு இன்று வில்பத்து மட்டுமே பிரச்சினையாக தெரிவதாகவும், ஏனைய பிரதேசங்களில் காடழிப்புக்கள் கண்களுக்குத் தெரிவதில்லையெனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டுவதற்காக சில தரப்பினர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 
சிங்களவருக்கு, காடழிப்பது பிரச்சினையில்லை; முஸ்லிம்கள் குடியேறுவதுதான் பிரச்சினை சிங்களவருக்கு, காடழிப்பது பிரச்சினையில்லை; முஸ்லிம்கள் குடியேறுவதுதான் பிரச்சினை Reviewed by Ceylon Muslim on April 05, 2019 Rating: 5