பாராளுமன்ற தகவலுடன், அம்பாறை ஒருவரின் வாகனமும் சிக்கியது

பலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பலங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து டெப் ஒன்றும், 3 தொலைபேசிகளும், 13 சிம் கார்ட்களும், ரி 56 ரக தோட்டக்கள் இரண்டு மற்றும் கெரடிட் கார்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அம்பாறை பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த நபர் கொள்ளுபிட்டியவில் உள்ள சிற்றூண்டிசாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட குறித்த நபரை இன்று (25) பலங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தகவலுடன், அம்பாறை ஒருவரின் வாகனமும் சிக்கியது பாராளுமன்ற தகவலுடன், அம்பாறை ஒருவரின் வாகனமும் சிக்கியது Reviewed by Ceylon Muslim on April 25, 2019 Rating: 5