நீர்கொழும்பு கலவரம், முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர்

நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட போரு­தொட்ட, பல­கத்­துறை பிர­தே­சத்தில் முச்­சக்­கர வண்டி சங்­கங்­களைச் சேர்ந்த இரண்டு குழுக்­க­ளி­டையே நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை ஏற்­பட்ட முறு­கலை அடுத்து நீர்­கொ­ழும்பு நகரில் முஸ்­லிம்கள் அதிகம் வாழும் பிர­தே­சங்­களில் வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. இந்த அசம்­பா­வி­தங்­க­ளின்­போது வீடுகள் பல தாக்­கப்­பட்­ட­துடன் உடை­மை­களும் சேத­மாக்­கப்­பட்­டன. பள்­ளி­வாசல் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.

சில வீடு­களில் நகைகள் , பணம் மற்றும் பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். இந்த சம்­ப­வத்­தின்­போது பல வாக­னங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­துடன் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சிலர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

அசம்­பா­வித சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­போது நீர்­கொ­ழும்பு பிராந்­திய பொலிஸ் பிரிவில் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது. ஆயினும் ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் இனந்­தெ­ரி­யாத குழுக்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­களும் தெரி­விக்­கின்­றனர்.

பெரி­ய­முல்லை லாசரஸ் வீதி, பெரி­ய­முல்லை செல்­ல­கந்த வீதி, தளு­பத்தை, கல்­கட்­டுவை வீதியில் சமகி மாவத்­தையில் அமைந்­துள்ள வீடுகள் பல­வற்றின் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­கர வண்­டிகள், மோட்டார் சைக்­கிள்கள் ஆகி­யன தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. பெரி­ய­முல்லை லாசரஸ் வீதியில் தெனி­ய­வத்த பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வா­சலின் யன்னல் கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன.

சம்­ப­வத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் இருந்­தனர். சிலர் தமது உற­வி­னர்­க­ளு­டைய வீடு­க­ளுக்கு பாது­காப்பு தேடிச் சென்­றனர்.

பள்­ளி­வாசல் மீதும் தாக்­குதல்

இதே­வேளை நீர்­கொ­ழும்பில் தெனி­யா­வத்த அசனார் தக்­கியா பள்­ளி­வாசல் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளின்­போது தாக்­கப்­பட்­டுள்­ளது. தக்­கியா பள்­ளி­வா­சலின் 8 கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலின் குர்­ஆன்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடி பெட்­டியும் உடைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு பெரிய முல்லை கல்­கட்­டுவ, செல்­லக்­கந்த பகு­தி­களில் 50 வீடுகள் தாக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு வீட்டில் நகை­களும், பணமும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. பொருட்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 10 முச்­சக்­கர வண்­டிகள், 6 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. வீடு­களின் கத­வுகள் கோட­ரி­யினால் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன என பெரிய முல்லை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் செய­லாளர் இஸ்­மதுல் ரஹ்மான் தெரி­வித்தார்.
நேற்று முன்­தினம் நீர்­கொ­ழும்பில் நடை­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், வன்­முறைச் சம்­ப­வங்கள் இப்­ப­கு­தியில் ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த இரவு 8.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. திட்­ட­மிட்டு இவ் வன்­மு­றைகள் முஸ்­லிம்கள் மீது நடாத்­தப்­பட்­டுள்­ளன. பெரிய முல்லை பள்­ளி­வா­சலில் பாது­காப்பு கட­மை­யி­லி­ருந்த சிவில் பாது­காப்பு வீரரும் பயத்­தினால் ஓடி­யுள்ளார். பல­கத்­து­றையில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 7 கடைகள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன என்றார்.

வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்ற பகு­தி­க­ளுக்கு நேற்று பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் விஜயம் செய்­தனர்.

கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மாஅ­திபர் தேச­பந்து தென்­ன­கோனும் விஜயம் செய்தார். வன்­முறை இடம்­பெற்ற பகு­தி­க­ளுக்கு இரா­ணுவம், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர், விமா­னப்­படை வீரர்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நீர்­கொ­ழும்பு பகு­தியைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஷேட பாது­காப்பு வழங்­கு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பொலிஸ் மா அதி­பரை கோரி­யுள்­ளன.பல­கத்­து­றையில் முச்­சக்­கர வண்­டிகள் நிறுத்­து­மிடம் தொடர்பில் எழுந்த சர்ச்­சையே இந்த வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு காரணம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்ட முச்­சக்­கர வண்டி தரிப்­பி­டத்தை முஸ்­லிம்­களே சட்ட ரீதி­யாக பதிவு செய்து கொண்­டுள்­ளனர். இது உல்­லாச பிர­யா­ணிகள் வருகை தரும் பிர­தே­ச­மாகும். இந்­நி­லையில் மாற்றுத் தரப்­பினர் முச்­சக்­கர வண்டி நிறுத்­து­மி­டத்தைப் பதிவு செய்யச் சென்ற சந்­தர்ப்­பத்தில் அவ்­விடம் ஏற்­க­னவே முஸ்­லிம்­களால் பதிவு செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்தே இரு தரப்­பி­ன­ருக்கும் முறுகல் நிலை உரு­வாகி வன்­மு­றை­க­ளாக மாறி­யுள்­ளது. பல­கத்­து­றையில் ஆரம்­பித்த வன்­மு­றைகள் பின்பு ஏனைய இடங்­க­ளுக்கும் பர­வி­யுள்­ளது.

நேற்றுக் காலை அப் பிர­தே­சத்தில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஊரங்கு தளர்த்­தப்­பட்­ட­நி­லையில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முப்­ப­டை­யி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். பிர­தே­சத்தில் அமைதி நில­வு­கின்ற போதிலும் மக்கள் அச்­சத்­து­ட­னேயே உள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இதே­வேளை இப் பிர­தே­சத்தில் மோதல் வெடிப்­ப­தற்கு அதிக மது­போ­தையே காரணம் என விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களில் இருவரைக் கைது செய்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள பலரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

இந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் இராணுவம் இணைந்து சுற்றிவளைப்புக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.a
நீர்கொழும்பு கலவரம், முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர் நீர்கொழும்பு கலவரம், முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர் Reviewed by NEWS on May 07, 2019 Rating: 5