சிரியாவுக்கு சென்ற ஒருவரை அவதானித்து வருகிறோம் - விரைவில் மாட்டுவார்சிரியாவுக்கு சென்று சி.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பயிற்சி எடுத்துகொண்டவர்கள் இந்த ஆண்டுதான் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஷாநாயக்க நாடாளுமன்றில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமுகமாகவே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்தமை தொடர்பில் தெரிந்திருந்தும் என்ன நடவடிக்கை எடுத்திருந்தீர்கள் என்று ஜே.வி.பி தலைவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில், “சிரியாவுக்கு பயிற்சிக்காக சென்றுவந்த ஒருவர் இருக்கின்றார். ஆனால் அவர் இதனை ஒழுங்கமைத்தவர் கிடையாது. அவர் வேறு பிரிவைச் சேர்ந்தவர். ஆனாலும் புலனாய்வுத்துறை அவரை தீவிரமாக கண்காணித்துவருகிறது. அவர் சார்ந்தோர் இதுவரை எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவில்லை. தீவிரவாதத்தை ஆதரித்து சிலர் பேசியிருந்தார்கள். ஆனால் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. விரைவில் அவர்களையும் கைதுசெய்வோம்.

மேலும் சிரியாவுக்கு சென்று பயிற்சி பெற்ற நபர்கள் நாட்டுக்கு திரும்பி வந்தது இரகசியம் கிடையாது. அந்தச் செய்தி பத்திரிகைகளிலும் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இந்த ஆண்டுதான் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கின்றனர்.” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...