ஞானசாரவுக்கு எதிரான ரிசாத்தின் வழக்கு! நேற்று நீதிமன்றம் வந்தார் ஞானசாரகலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்து தொடர்பில் இழப்பீட்டை கோரி அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தாக்கல் செய்த வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மாவட்ட நீதின்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கு வந்திருந்த விதாரந்தெனியே நந்த தேரர், அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக சட்டத்தை செயல்ப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் வெளியிட்ட கருத்தால் தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக கூறி அமைச்சர் ரிஷாட் பதியூதீன், 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்காக ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...