குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் இன்று மாலை மீது சில கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் மற்றும் இராணுவம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவுகிறது.
மூலம்> ஜேவிபி நியூஸ்