இலங்கையில் நேற்று முதல் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று அநேகமான இடங்களில் முஸ்லிம் பள்ளிவாயல்களில் புனித ரமலான் மாதத்திற்கான இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களின் தொழுகைகள் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இலங்கையில் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையால் 09 மணிக்கு முன்னரே தொழுகைகளை நிறைவுசெய்ய வேண்டிய நிலைக்கு எம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிலாபம், குருநாகல், குளியாபிட்டிய மற்றும் மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளால் முஸ்லிம்களுடைய பள்ளிவாயல்கள், வீடுகள், கடைகள் போன்றவை அதிகளவிலான சேதங்களுக்கு முகங்கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.