ரிசாத்துக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இன்னும் எமது கட்சி தீர்மானமில்லை!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் கட்சியாக நீண்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் கூட்டு எதிர்கட்சியிலும் அது தொடர்பில் இரண்டு கருத்து காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...