நாமல் குமார மேலதிக விசாரணைகளுக்காக CID இற்கு..!


ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதற்காக அவர் நேற்று வரகாபொல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த சில தினங்களாக நடாத்தப்பட்ட இனவாத வன்செயல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...