ரயிலுடன் மோதி, ராணுவ வீரர்கள் 5வர் பலி..!

கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 05 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 02 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இராணுவ கவச வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து கூறினார்.

கொழும்பில் இருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் குறித்த இராணுவ வாகனம் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...