தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 20, 2019

“பேசி ஒரு முடிவைக் காணுவோம்” - ஹாரிஸிடம் கேட்ட ரத்தன தேரர் !

கல்முனைக்கு இன்று காலை சென்ற அத்துரலியே ரத்தன தேரர் , அங்கு உண்ணாவிரதம் இருப்போரை சந்தித்துவிட்டு வெளியில் வந்து அப்பகுதி எம் பி ஹாரீஸை சந்திக்க தேடியதாக தகவல்.

எம்பி கொழும்பில் இருப்பதாக சொல்லப்பட்டதையடுத்து அவரை தொலைபேசியினூடாக தொடர்புகொண்ட ரத்தன தேரர் , கல்முனை விவகாரம் குறித்து பேச வேண்டுமெனவும் அதற்குரிய பிரதிநிதிகளை தருமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து கல்முனை மேயர் உட்பட்ட பிரதிநிதிகளை அனுப்புவதாக ஹாரீஸ் எம் பி உறுதியளித்தார்.

பிரச்சினைகளை பேசி தீர்த்து முடிவைக் காணவேண்டுமென்றும் அதை கலந்துபேசி அறிவிப்பதாகவும் அத்துரலியே ரத்தன தேரர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
thamilan

Post Top Ad

Your Ad Spot

Pages