தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 23, 2019

பொலிஸ் மா அதிபரின் அறிக்கை உண்மைக்குக் கிடைத்த வெற்றி!உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை எனவும் அத்தாக்குதலுடன் அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரட்ன சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.


இந்த அறிக்கையானது ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களை தகர்த்தெறிந்து ஜனநாயக அரசியலில் அவருக்குள்ள ஈடுபாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களால் அச்சமடைந்திருந்த முஸ்லிம் சமூகத்தினரும் இந்த அறிக்கையின் பின்னர் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.


ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இனவாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, எஸ்பி திஸ்ஸநாயக்க ஆகியோர் முன்னாள் அமைச்சருக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் அவருடைய புகைப்படம் தாங்கிய பதாதைகளை நாடளாவியரீதியில் காட்சிப்படுத்தி “ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், ஊர்பக்கம் வர வேண்ட்டாம்” என்றும் வலுக்கட்டாயப்படுத்தியிருந்தனர். ரிஷாட் பதியுதீன் பதவி துறக்க வேண்டுமென்று அதுரலிய ரத்தின தேரர் கண்டியில் உண்ணாவிரதமும் இருந்தார். எனினும் அரசியல் பழிவாங்கல் நோக்கில் சோடிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டுக்களை ரிஷாட் பதியுதீன் துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஜனநாயக வழியில் நடத்திச் சென்ற ஒரு தலைமை மீது வீணான இனவாதப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதால் இனங்களுக்கு இடையிலான உறவுகளிலும் சந்தேகம் நிலவி, நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படுமளவுக்கு நிலைமைகள் மாறியிருந்தன.


இந்நிலையில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமாக ஆராய்ந்த பொலிஸ் துறை தௌிவான அறிக்கையைச் சமர்ப்பித்திருப்பது ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கு நிம்மதியையும், தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Post Top Ad

Your Ad Spot

Pages