துமிந்த சில்­வாவின் சிறையிலிருந்து கைய­டக்கத் தொலை­பே­சிகள் கண்­டு­பி­டிப்பு

மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு தற்­போது வெலிக்­கடை சிறைச்சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் துமிந்த சில்­வாவின் அறையிலிருந்து 4 கைய­டக்கத் தொலை­பே­சிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துமிந்த சில்வாவின் செல்பி புகைப்படம் ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், சிறைச்­சா­லையின் 3ஆம் இலக்க வைத்­தி­ய­சாலை அறையில் மேற்கொண்ட சோதனை நட­வ­டிக்­கையின் போது, அங்கு கழிப்பறையிலிருந்து ஸ்மார்ட் கைய­டக்கத் தொலை­பே­சிகள் இரண்டும், சாதா­ரண கையடக்கத் தொலை­பே­சிகள் இரண்டும் சிறைச்­சாலை புலனாய்வுப் பிரி­வினரால் கண்­டு­பி­டிக்கப்பட்டுள்ளன.

மீட்­கப்­பட்ட தொலை­பே­சி­க­ளி­லுள்ள சிம் அட்­டைகளும் மேல­திக பரி­சோ­த­னைக்­காக குற்ற விசா­ரணைத் திணைக்­க­ளத்­திடம் ஒப்படைக்­கப்­பட்­டுள்­ளன. (ஸ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...