நாங்கள் மீண்டும் அமைச்சு பொறுப்பேற்க அவசியமில்லை : ஹரீஸ்முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"தற்போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது மாவட்டங்களில் உள்ளனர். இதனால் அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.

அத்துடன் உடனடியாக அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்க வேண்டிய தேவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை எனவும்" அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை அடுத்த வாரம் ஏற்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமையும் முன்னாள் அமைச்சர் ஹலீல் இது தொடர்பில் கலந்துரையாடல் உள்ளாதாகவும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
நாங்கள் மீண்டும் அமைச்சு பொறுப்பேற்க அவசியமில்லை : ஹரீஸ் நாங்கள் மீண்டும் அமைச்சு பொறுப்பேற்க அவசியமில்லை : ஹரீஸ் Reviewed by NEWS on June 15, 2019 Rating: 5