போரை விரும்பவில்லை ஆனால் விட்டுவைக்க மாட்டோம் - எச்சரிக்கை விடுத்த சவூதி



ஓமன் வளைகுடாவில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் தாக்கப்பட்டதற்கு இரானை குற்றஞ்சாட்டி உள்ளது செளதி அரேபியா. செளதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு, இறையாண்மைக்கு, நலனுக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம்," என்று அரேபியா முழுவதும் வெளிவரும் நாளிதழான அஷார்க் அல்- அவ்ஸாத்திடம் கூறி உள்ளார்.

முன்னதாக, ஓமன் வளைகுடாவில் எண்ணை டாங்கர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இரான் கூறியிருந்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்து இருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...