நாட்டில் 1800 மத்ரசாக்களின், ஆசிரியர்கள் தொடர்பில் தகவல் இல்லை : ஆனந்த சாகர தேரர்

நாட்டில் சுமார் 1800 மத்ரசா பாடசாலைகள் செயற்படுவதாகவும் அதில் கற்பிக்கும் ஆசிரியர்கள் சம்பந்தமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை என்று பாகியங்கல ஆனந்த சாகர தேரர் கூறினார். 

நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். 

மியன்மார் ரோகின்யா முஸ்லிம்கள் சுமார் 1700 பேருக்கும் அதிகமானோர் இருப்பதாகவும், அவர்கள் தற்போது முகாம்களுக்கு வௌியிலேயே இருப்பதாகவும், பாதுகாப்பு தரப்பினரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளதாக கூறினார். 

அதேநேரம் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் வந்த சிலர் மட்டக்களப்பு மற்றும் மன்னார் பிரதேசங்களில் இருப்பதாகவும் அவர் கூறினார். 

இவை தவிர லெபனானில் இருந்து 60 பேர், யெமனானில் இருந்து 20 பேர், பலஸ்தீனில் இருந்து 53 பேர், ஈராக்கில் இருந்து 32பேர் என்று 11,000 பேர் வரை நாட்டில் அடிப்படைவாத கல்வியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக பாகியங்கல ஆனந்த சாகர தேரர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...