ஷாபீ 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!


வைத்திய ஷாபிக்கு எதிராக வழக்கு இன்று நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லையாயினும் அவரை விடுவிப்பதன் ஊடாக ஏனைய முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும் என நீதிபதி கருதுவதன் பின்னணியில் பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏலவே இவர் இன்று விடுதலை செய்வததற்கான நிலை காணப்பட்டாலும், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் 25ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

UPDATE  TODAY:


குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் தெரிவித்தார்.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று தெரிவித்து பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டதையடுத்து அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே நீதிமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் அவருக்கு எதிரான அசாதாரண சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.
அதேநேரம் அவருக்கு எதிரான நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அசாதாரண நிதி உழைப்பு சம்பந்தமான குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், எனினும் அது தொடர்பில் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் வைத்தியர் ஷாபி சத்திரசிகிச்சை செய்த பின்னர் 02 வருடங்களாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று முறைப்பாடு செய்துள்ள 147 தாய்மார்களை, விஷேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைப் படி கட்டாயம் SHG பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுமாறும் பிரதி சொலிசிஸ்டர் நீதவானிடம் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை பெண்கள் பல் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஒன்று கூடி வைத்தியர் ஷாபிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஷாபீ 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்..! ஷாபீ 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்..! Reviewed by NEWS on July 11, 2019 Rating: 5