தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 1, 2019

அட்டாளைசேனையில் மற்றுமொரு பொது விளையாட்டு மைதானம் - நசீர் எம்.பி நிதி ஒதுக்கீடுநீண்ட காலமாக அட்டாளைச்சேனை 1,9,10 பிரிவை உள்ளடக்கியதாக ஒரு பொது விளையாட்டு மைதானம் இன்மையை கருத்திற் கொண்டு, அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினால் மூன்று ஏக்கர் காணியினை அல் அறபா வித்தியாலத்திற்கு அன்பளிப்பாக பாடசாலை தேவைகளுக்கும், இளைஞர்களின் எதிர்கால நலன்கருதி பொது விளையாட்டு மைதானத்திற்காகவும் இக்காணி வழங்கப்பட்டது.


அட்டாளைச்சேனை அல் அறபா வித்தியாலய அதிபர் அன்சார் தலைமையில் நேற்று விளையாட்டுக் கழங்கள், பொது அமைப்புக்களோடு நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்கள் விளையாட்டு மைதானம் அமையவுள்ள காணியினை சென்று பார்வையிட்டதோடு விளையாட்டு மைதானத்தை மிக விரைவில் முழுமையாக செப்பனிட்டு செய்து தருவதாகவும் வாக்குறுதி வழங்கினார்.

இதன்போது புறத்தோட்ட பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வேண்டி ஆரம்பக் கட்டமாகமாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களினால் 2 மில்லியல் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்வில் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தின், அல் அறபா வித்தியாலய அதிபர் அன்சார், விளையாட்டுக் கழக வீரர்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages