முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதை உடனடியாக தடைசெய்யவேண்டும் - எஸ்.பி. திஸ்லநாயக்க

சரணாகதி என்ற பெயரில் முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதை உடனடியாக தடைசெய்யவேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸலநாயக்க, நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2050 ஆகும்போது சிங்கள பெளத்தர்கள் சிறுபான்மையாகும் அபாயம் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

பொரளையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பரிமாற்று கேந்திர நிலையதில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பெளத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த மதங்களைச்சேர்தவர்கள் வாழும் இந்த பூமியில் மதங்களின் விகிதாசாரத்தை பாதுகாத்துக்கொள்வது அத்தியாவசியமாகும். ஏனெனில் உலக பெளத்த தேரவார நாடுகளின் மத்திய நிலையமாக இலங்கையையே ஏற்றுக்கொண்டுள்ளன. 

அதனால் நாட்டின் தற்போதை இனவிகிதாசாரத்தின் பிரகாரம் பெளத்தர் சுமார் 74.9 வீதமும் இலங்கை தமிழர் 11.2வீதமும் இந்திய தமிழர் 4.2வீதமும் இலங்கை முஸ்லிம்கள் 9.3 வீதமும் வேறு இனத்தவர்கள் தசம் 5வீதமானர்களும் இருக்கின்றனர். இந்த விகிதாசாரத்தை இவ்வாறே பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இதற்கான தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தினதும் அரசியல் கட்சிகளினதும் அவதானம் மிகமுக்கியமாகும். அதற்காக ஒரு குடும்பத்துக்கு இத்தனைபேர் என்ற திட்டமிட்ட அடிப்படையில் உடனடியாக தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதை உடனடியாக தடைசெய்யவேண்டும் - எஸ்.பி. திஸ்லநாயக்க முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதை  உடனடியாக தடைசெய்யவேண்டும் - எஸ்.பி. திஸ்லநாயக்க Reviewed by NEWS on July 04, 2019 Rating: 5