எதிரணி கழுகுக் கண் கொண்டு எங்களை பார்க்கின்றனர் : இஸ்மாயில் எம்.பி

அம்பாறை மாவட்டம் அடங்கலாக நாடு முழுவதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸி வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சியில் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்ட பலர் குறிப்பாக எதிரணியின் சிலர் கழுகுக் கண் கொண்டு எங்களது நகர்வுகளை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். யார் தடுக்க நினைத்தாலும் அவற்றை மீறி என்னால் முடியுமான வரை எமது பிரதேச அபிவிருத்திகளை மெருகூட்டுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சியாமா சியாஸ் தலைமையில் சம்மாந்துறை தென்னம்பிள்ளைக் கிராமத்தில் இடம்பெற்ற பிரதேச மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்ற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள்,

மின்சாரம், குடி நீர் இணைப்புக்கள் இல்லாத காலத்திலும் இவ்வாறான பிரதேசங்களில் குடியேறி நமது எதிர்கால இருப்புக்கு வித்திட்ட உங்களை தியாகிகள் என்றுதான் கூற வேண்டும் உண்மையிலேயே இப்படியான பிரதேசங்களுக்கு சேவை வழங்குவதில் நான் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

இங்குள்ள மக்களின் சிரமமான போக்குவரத்தை இல்லாதொழிக்க வீதிகளுக்கு கொங்ரீட் இடும் வேலைத்திட்டங்கள் மற்றும் இப் பிரதேச மக்களுக்காண வாழ்வாதார உதவிகள் வழங்குதல் என பல்வேறு அபிவிருத்திகள் இன்னும் சில நாட்களில் வந்தடையவுள்ளன. அதை யார் தடுக்க நினைத்தாலும் எமது சேவைகள் தொடர்ந்தே செல்லும்.

மக்கள் எங்களுக்கு அளித்த வாக்கும், நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்கும் நிலைபெறும் வரை ஒயாது எமது பயணங்கள் தொடர்ந்து கொண்டே செல்லும் - என்றார்.

(நூருல் ஹுதா உமர்)
எதிரணி கழுகுக் கண் கொண்டு எங்களை பார்க்கின்றனர் : இஸ்மாயில் எம்.பி எதிரணி கழுகுக் கண் கொண்டு எங்களை பார்க்கின்றனர் : இஸ்மாயில் எம்.பி Reviewed by NEWS on July 22, 2019 Rating: 5