என் கட்சியின் முடிவே, இறுதி முடிவு : ரிஷாத் பதியுதீன்

கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
என் கட்சியின் முடிவே, இறுதி முடிவு : ரிஷாத் பதியுதீன் என் கட்சியின் முடிவே, இறுதி முடிவு : ரிஷாத் பதியுதீன் Reviewed by NEWS on July 15, 2019 Rating: 5