சஜித் வந்தால் நானும் மகிழ்ச்சி :மொஹமட் முஸம்மில்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அக்கட்சிக்குள் நெருக்கடி நிலை உருவாகி இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்