கோத்தா களமிறங்குவதாக நான் சொல்லவே இல்லை : மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலேயும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 3 மாதங்கள் கடந்துள்ளதாகவம் அதற்கான தனது கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

காயமடைந்தவர்கள் இன்றும் வைத்தியசாலைகளில் உயிருக்க போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலத்தவில்லை எனவம் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது மற்றுமொருவர் அவ்வாறு இல்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சரத் பொன்சேகா மிகவும் தெளிவாக இன்னமும் தீவிரவாதம் முடிவடையவில்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...