வேட்பாளர்களின் கொள்கைகள் வெளியான பின்னரே முடிவெடுப்போம் : ரிஷாத் பதியுதீன்

இதுவரையில் தேர்தல் அறிவிக்கப்படவுமில்லை, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்படவுமில்லை. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் உயர் பீடம் கூடியே யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற இறுதித் தீர்மானம் பெறப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதுவரையில் இரு கட்சிகள் மாத்திரமே தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் இதுவரை வேட்பாளரை தீர்மானிக்க வில்லை. வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அவர்களது கொள்கைகளை வைத்தே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நேற்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...