புத்தளம் குப்பை விவகாரம் : சட்ட விரோதம் என நீதிமன்றம் அறிவிப்பு

அல்ஹம்துலில்லாஹ்..! அல்ஹம்துலில்லாஹ்..!

புத்தளத்திற்கு குப்பை கொண்டுவருவது சட்டவிரோதமானது என இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 
தற்காலிக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..!!

# இதுவரை குப்பையை கொண்டுவந்தது EPL license இல்லாமலேயே (சட்டவிரோதமாக) என நிறுவப்பட்டுள்ளது..!
# இதுவரை குப்பையை கொண்டுவருவதற்கு பாதுகாப்பளித்த இராணுவமும் போலீசாரும் இனி குப்பையை கொண்டுவராமல் இருக்க மக்கள் சார்பாக உதவ வேண்டும்...!
# இந்த கட்டளைகள், இதனை அமுல்படுத்துவதோடு சம்பந்தப்பட்ட அணைத்து நிறுவனங்களுக்கும் இன்று சட்டரீதியாக அறிவிக்கப்படும்..!
# வழக்கின் அடுத்த தினம் எதிர்வரும் 12 - 03 -2020

இது சந்ததி காக்கும் சரித்திரப்போராட்டத்தின் முதல் வெற்றிப்படி..!
இன்ஷா அல்லாஹ் நிரந்தரத் தீர்வு நோக்கி எமது வழக்கு முன்னேற அனைவரும் கைகோர்ப்போம்...!

இயற்கையை நேசிக்கும் இலங்கை வாழ் சகல உள்ளங்களுக்கும்....
இந்த சாத்வீகப்போராட்டத்திற்கு இறைவனிடம் பிரார்த்தித்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் இந்த இனிப்பான செய்தியை 
நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறோம்...!


க்ளீன் புத்தளம் அமைப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...