சஹ்ரான் ஹசீமின் மனைவியிடத்தில் சுமார் 2 மணி நேரம் இரகசிய வாக்குமூலம் ...!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செயற்படுத்திய தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா நீதிமன்றில் நேற்று (04) சுமார் 2 மணி நேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் அவர் இவ்வாறு இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் இதற்கு முன்னர் இரு முறை இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...