2020 இல் நாங்களே ஆட்சி - ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 2020 இல் நாமே அரசாங்கத்தை அமைப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளை விடுத்து பிரதமரை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலமுடன் செயற்படவேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்து தெரிவு செய்யப்படவுள்ள நாட்டுக்கான சரியான பாதை எது? அதற்கான தலைவர்கள் யார்? முறையான தலைமைத்துவப் பாதை எந்த கட்சியில் உள்ளது என்பதிலேயே அனைவரும் சிந்தித்து வருகின்றனர்.

ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களையும் கூறமுடியும். எனினும் நாட்டை முன்னேற்றுவதற்கான தீர்மானம் அரசியல் தலைவர்களிடமே உள்ளது. அபிவிருத்தியின் பயனை பெற்றுக்கொள்ளும் உரிமையை சாதாரண மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டிய அவசியம் நாட்டின் நிலையான அபிவிருத்தி தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம், ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்பி நாட்டின் சட்டம் சகலருக்கும் சமமானதாக அமைவது முக்கியம் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் 68ஆவது மாநாட்டுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 68ஆவது பிறந்த நாளும் நேற்று நினைவுகூறப்பட்ட நிலையில் மாநாட்டில் அவருக்கு அனைவராலும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...