சஹ்ரானின் பிள்ளையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைதாரிகளின் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மகளை, ஸஹ்ரானின் மனைவியின் தாயிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் ரங்க திசாநாயக்க நேற்று (02) உத்தரவிட்டார்.

4 வயதான சிறுமியை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்க அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...