ஸ்ரீ ல.சு.கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்- தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிப்பு...!


ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை கட்சி சார்பில் களமிறக்குவதாக ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது கட்சி எடுத்துள்ள முதலாவது தீர்மானம் எனவும், வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கவுள்ளதாகவும் வீரகுமார திஸாநாயக்க எம்.பி. மேலும் கூறியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...