விரைவில் UNP அறிவிப்பை வெளியிடும் : கபீர் கஷீம்

எதிர்வரும் நாட்களில் பிரதமர் உள்ளிட்ட மூத்த பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைள் குறித்து விளக்கமளிப்பதாக UNP தவிசாளர் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

இன்று (04) சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மற்ற கட்சிகளை விட ஜனநாயக முடிவுகளை மேற்கொள்வதால் யார் வேண்டுமானாலும் தனது கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் தற்போது கட்சி தலைமையகத்தில் சாதாரண நடவடிக்கை போன்று தேர்தல் நடவடிக்கைகளும் ஆரம்பமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சிகள் கூறும் வகையில் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...