பிரதான செய்திகள்

UNP ஆட்சி கவிழும், நான் ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் பதவியேற்போம் ..!“எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி மலரும். நான் ஜனாதிபதியாகப் பதவியேற்பேன். மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்பார்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

“நாம் பதவியேற்றதும் குறுகிய காலத்துக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போன்று பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்துவோம்” எனவும் உறுதியளித்தார்.

கூட்டுறவுத் துறையின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள தேசிய கண்காட்சி காட்சிப்படுத்தல் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இன்று நாடு பொருளாதார ரீதியிலும், தேசிய பாதுகாப்புத் தொடர்பிலும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் பல எதிர் விளைவுகள் ஏற்படும்.

இவ்வாறான பல சவால்கள் 2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகும்போது முன் காணப்பட்டது. 30 வருட பயங்கரவாதம் தேசிய பொருளாதாரத்துக்கும் தனி மனித சுதந்திரத்துக்கும் பாரிய தடையாக காணப்பட்டது.

30 வருட கால சிவில் போரை குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பலமான ஒரு தலைமைத்துவத்தின் கீழ் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

குறுகிய காலத்துக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, ஆரம்ப கட்டங்களும் செயற்படுத்தி வெற்றியும் அடைந்து அடுத்த செயற்பாடுகளுக்காக திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

ஆட்சி மாற்றத்தில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கவில்லை. தேசிய உற்பத்திக்கும், தேசிய பாதுகாப்பூக்கும் இன்று எந்த நிலையில் காணப்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் தேவையில்லை.

ஆகவே, இவ்விரண்டும் இன்று எமக்குச் சவாலாகக் காணப்படுகின்றன. நாம் ஆட்சிக்கு வந்ததும் இதனை இந்தச் சவாலை முறியடித்து வெற்றி காண்போம்” - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget