தன்னுடன் நேரடி விவாதத்திட்கு வருமாறு கோட்டாவுக்கு சஜித் அழைப்பு ...!


தன்னுடன் நேருக்கு நேரான நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இரண்டு பேரினதும் கொள்கை மற்றும் நோக்கங்கள் தொடர்பான விடயங்களை வாக்காளர்களுக்கு முன்வைப்பதற்காக இந்த சவாலை விடுப்பதாக சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

முன்கூட்டியே எழுதப்பட்ட பிரதிகள் இன்றி தனது எதிரணி வேட்பாளருடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வலுவான வேட்பாளர் ஒருவர் அஞ்ச தேவையில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...