ஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 25, 27, 28 ஆகிய தினங்களில் ஏதேனுமொரு நாளை தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (04) தேர்தல் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அவ்வேளையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...